கண்ணம்மாவுடன் இணைந்த ஹேமா, பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய திருப்பம் – ரசிகர்கள் மகிழ்ச்சி!
தற்போது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் ஹேமா பற்றிய உண்மை தெரிந்ததும் கண்ணம்மா என்ன செய்வார் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், கண்ணம்மாவுடன் ஹேமா இணைந்தவாறு வெளியான படப்பிடிப்பு புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் தற்போது ட்விஸ்டுகளுக்கு பெயர் போன ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என பலரும் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், சமீபத்தில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோவில் கண்ணம்மாவுக்கு ஹேமா தான் தனது 2வது மகள் என்கிற உண்மை தெரிய வருகிறது. இப்போது பாரதியிடம் இருக்கும் ஹேமாவை கண்ணம்மா பிரித்து தன்னிடம் அழைத்து செல்வாரா என எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!
இதற்கு மத்தியில், ஏற்கனவே லட்சுமி பற்றிய உண்மை பாரதிக்கு தெரியக்கூடாது என மறைத்து வந்த கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா குடும்பம், இனி ஹேமாவும் கண்ணம்மாவின் மகள் என்கிற உண்மை பாரதிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பல்வேறு குழப்பங்கள் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டுமாக பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே பெரிய விரிசல் உருவாகலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
திருநங்கைகளின் கஷ்டங்களை சொல்லும் நமீதா மாரிமுத்து – “பிக்பாஸ் சீசன் 2” முதல் ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் கண்ணம்மா, ஹேமாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு படப்பிடிப்பு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் ஹேமா மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தோஷமாக இருப்பது போல தோற்றமளிக்கிறது. இதனால் பாரதியிடம் இருந்து ஹேமாவை, கண்ணம்மா பிரித்து சென்றிருப்பாரோ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். என்றாலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த அம்மா மற்றும் மகள் மீண்டும் இணைந்துள்ளதை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சீரியலில் எந்த கேரக்டரும் சந்தோஷமாக இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வருத்தம். இதை பார்த்து கொண்டு இருந்தால் மக்களுக்கும் பைத்தியம் தான் பிடிக்கும். சந்தோஷமான சீன் ஏதாவது காட்டுகின்றார்களா? நல்ல காட்டுங்கள். இல்லை இப்படியே ஜவ்வு போல இழுத்தால் ரிமோட் எங்கள் கையில் வேறு பக்கத்தை திருப்பும்