வெண்பா கர்ப்பமாக இருப்பதால் ‘பாரதி கண்ணம்மா’வில் ஏற்பட்ட ட்விஸ்ட் – வெளியான தகவல்!

0
வெண்பா கர்ப்பமாக இருப்பதால் 'பாரதி கண்ணம்மா'வில் ஏற்பட்ட ட்விஸ்ட் - வெளியான தகவல்!
வெண்பா கர்ப்பமாக இருப்பதால் 'பாரதி கண்ணம்மா'வில் ஏற்பட்ட ட்விஸ்ட் - வெளியான தகவல்!
வெண்பா கர்ப்பமாக இருப்பதால் ‘பாரதி கண்ணம்மா’வில் ஏற்பட்ட ட்விஸ்ட் – வெளியான தகவல்!

விஜய் டிவி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா தற்போது கர்ப்பமாக இருப்பதால் கதையை மாற்றி படக்குழுவினர் அவருக்கு பிரேக் கொடுத்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியலில் டாப் இடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா, வாரந்தோறும் TRP ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா பிரிந்தது, கண்ணம்மாவுக்கு குழந்தை பிறந்தது மற்றும் வெண்பாவின் சூழ்ச்சி என வழங்கம் போல் சென்று கொண்டிருந்த கதையில் கடந்த சில வாரங்களாக பாரதி, கண்ணம்மா இடையே மீண்டும் நெருக்கம் அதிகரிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் சேரப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அவன் – இவன் பட வழக்கில் இயக்குனர் பாலா விடுதலை – நீதிமன்றம் அதிரடி!

இப்படியாக கதைக்களம் செல்ல காரணம் வில்லி வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் தற்போது கர்ப்பமாக இருப்பதால் கதையை மாற்றி பாரதி, கண்ணம்மா மற்றும் குழந்தைகளை சுற்றி கதை நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதில் கண்ணம்மாவும் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக வெளியான புகைப்படத்தில், பாரதிக்கு அருகில் கண்ணம்மா அமர்ந்து சாப்பிடுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் எப்போதான் சேருவார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமில்லாமல் அஞ்சலி பற்றிய ரகசியத்தை தெரிந்து கொண்ட வெண்பா அடுத்து என்ன செய்வார் என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஃபரீனாவின் பிரசவம் முடியும் வரை இந்த உண்மை வெளிவர வாய்ப்பு இல்லை என்பதால் அதுவரை, கதை அஞ்சலியை சுற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெண்பாவின் பிரசவத்திற்கு பின்னர் பல்வேறு திருப்பங்களை கதையில் எதிர்பார்க்கலாம். எனவே ரசிகர்கள் அதுவரை காத்திருக்க வேண்டி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!