போலீசிடம் வசமாக மாட்டிய வெண்பா, கண்ணம்மாவை நேரில் சந்திக்கும் பாரதி? அடுத்த எபிசோட்!

0
போலீசிடம் வசமாக மாட்டிய வெண்பா, கண்ணம்மாவை நேரில் சந்திக்கும் பாரதி? அடுத்த எபிசோட்!
போலீசிடம் வசமாக மாட்டிய வெண்பா, கண்ணம்மாவை நேரில் சந்திக்கும் பாரதி? அடுத்த எபிசோட்!
போலீசிடம் வசமாக மாட்டிய வெண்பா, கண்ணம்மாவை நேரில் சந்திக்கும் பாரதி? அடுத்த எபிசோட்!

மக்களுக்கு விருப்பமான மெகா சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய திருப்பமாக சீரியல் வில்லி வெண்பா புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்போது அந்த சீரியலில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பாரதி தனது வளர்ப்பு மகள் ஹேமாவை கண்ணம்மாவுடம் பழக கூடாது என்பதற்காக அமெரிக்கா கூட்டி செல்ல நினைக்கிறார். அதற்கு அவரது குடும்பத்தில் பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும், கட்டாயம் அமெரிக்கா கூட்டி செல்வேன் என மிரட்டுகிறார். சௌந்தர்யா எவ்வளவோ முயற்சி செய்தும் பாரதி கட்டாயமாக அமெரிக்கா செல்ல விமான நிலையம் செல்கிறார்.

தமிழகத்தில் மேலும் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு – நாளை முதல் அமல்!

அப்போது ஹேமாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது. அவளுக்கு வலிப்பு வருகிறது உடனே காரை நிறுத்தியதும் பின்னால் வந்த சௌந்தர்யா தனது பேத்திக்கு என்ன ஆச்சு? என தன் மகனையே மிரட்டுகிறார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹேமாகவுக்கு உடனடியாக அவசர சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர் குழந்தைகள் நல மருத்துவர் பிரியா வெளியே வந்து ஹேமாவை காப்பாற்ற ஒரே வழி தான் இருக்கிறது என தெரிவிக்க என்ன செய்ய வேண்டும் என பாரதி கேட்கிறார், உடனே சமையல் அம்மாவை வர வைக்க வேண்டும் என மருத்துவர் தெரிவிக்கிறார்.

ஜூலை 26 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதற்கு பாரதி தனது அம்மாவை பார்த்து அழைத்து வர சொல்லும்போது அதற்கு சௌந்தர்யா மறுப்பு தெரிவித்து, பாரதியே சென்று அழைத்து வர சொல்கிறார். உடனே வெண்பா பல தடங்கல் தெரிவிக்க, அதனை காதில் வாங்காமல் கண்ணம்மாவை அழைக்க புறப்படுகிறார். அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் சீரியல் வில்லி வெண்பா என்கிற ஃபரீனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்து என்ன நடக்கப்போகுது? என்ற கேள்வியுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் வெண்பாவிற்கு பின் போலீஸ் வாகனம் ஒன்று உள்ளது. அதன்படி வெண்பா போலீசில் மாட்டிக்கொண்டாரா அல்லது வேறு ஏதும் டிவிஸ்டு உள்ளதா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாரதி வேறு கண்ணம்மாவை நேரில் சந்திக்க சென்றுள்ளார். இதனால் அடுத்தடுத்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here