புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – விரைவில்..! வெளியான ப்ரோமோ!

2
புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - விரைவில்..! வெளியான ப்ரோமோ!
புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 - விரைவில்..! வெளியான ப்ரோமோ!
புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – விரைவில்..! வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த சீரியல் 8 வருடங்களுக்கு பின் 2வது சீசனாக தொடங்குவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா இருக்கிறது. முதலில் கருப்பாக இருப்பதால் கண்ணம்மா அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுவதும் தனது தங்கைக்கு மட்டுமே பாசத்தை கொடுக்கும் சித்தி கொடுமைகளை தாங்கி கொள்வது போல காட்டப்பட்டது. அதன் பின்னர் டாக்டராக இருக்கும் பாரதி, கண்ணம்மாவை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வெளியான புகைப்படம்!!

ஒரு கட்டத்தில் கண்ணம்மாவை திருமணம் செய்ய அவர் அம்மா சௌந்தர்யா ஏற்க மறுக்கிறார். அப்போது மாமியார் கொடுமையில் இருக்கும் கண்ணம்மாவை சௌந்தர்யா புரிந்து கொள்கிறார். அப்போது கண்ணம்மா கர்ப்பமாக இருக்க பாரதிக்கு குழந்தை பிறக்காது என்ற பொய் சொல்லுக்கும் வெண்பாவால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிக்கின்றனர். வயிற்றில் குழந்தையும் கண்ணம்மா ஒவ்வொரு வேலையாக செய்ய பிரசவத்தில் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா கஷ்டப்படுவார் என நினைத்து ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து வளர்க்கின்றனர். மற்றொரு குழந்தை கண்ணம்மாவுடன் இருக்கிறது. மனைவி துரோகம் செய்து விட்டார் என வருத்தத்தில் இருக்கும் பாரதி இந்த குழந்தையை பார்த்து மனம் மாறி பாசத்துடன் வளர்க்கிறார். அதன் பின்னர் 8 வருடங்கள் கழித்து கதை காட்டப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது.

வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என அஞ்சலி சொன்னதால் ஹேமா யாருடைய குழந்தை என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மா அப்போ ஹேமா தான் தன்னுடைய குழந்தையா என்ற வருத்தத்தில் இருக்கிறார். மேலும் வெண்பா இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை மிரட்டி வருகிறார்.

சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற சொல்லும் அப்பா, செய்வாரா சரவணன்? இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா எபிசோட் முடிய உள்ளதாகவும் 8 வருடங்களுக்கு பின் குழந்தைகள் வளர்ந்து கதை நகருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதால் இந்த சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் கண்ணம்மா, ஹேமா, லட்சுமி, பாரதி மற்றும் சௌந்தர்யா என அனைவரும் ஒன்றாக நடந்து வருவது போல காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Bharathi kannama serial Telugu serial ‘karthigai deepam’ thoda remake thaan . Bharathi kannama serial director avarodaiya sontha brain vachi intha serial avar kodukkala. Ivar Oru dummy piece

  2. அப்பாடா. ஜவ்வு முடியப் போகிறதே. சந்தோஷம். கொஞ்சம் கூட. லாஜிக்கே இல்லாத கதை. ஒரு DNA டெஸ்டில் தெறியகூடிய விஷயத்தை இப்படி இழுத்திருக்கிறார்கள். ஒரு டாக்டருக்கு இது கூடவா தெரியாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!