லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை அறிந்த அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை அறிந்த அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை அறிந்த அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை அறிந்த அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் டிவியில் பல பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாரதி கண்ணம்மா” இந்த சீரியலில் தற்போது கண்ணம்மா மற்றும் பாரதி இருவருக்குமான காதல் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஹேமாவின் உடல் நிலை காரணமாக கண்ணம்மா வீட்டில் இருக்கிறார். ஹேமாவின் வருகையால் கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரும் மகிழ்ச்சி அடைந்து ஹேமாவை நன்றாக கவனித்து கொள்கின்றனர். இப்படியாக இருக்க, வெண்பா இந்த செய்தியினை அறிந்து மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்றும் முயற்சிக்கிறார்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 24 இடங்களில் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

இதனால் தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் தொடர்ந்து இருந்து வருகின்றது. அடுத்தடுத்து பல ட்விஸ்டுகளுடன் இந்த சீரியலில் வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இப்படியாக இருக்க, தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் லட்சுமி தனக்கு வயிறு வலிக்கின்றது என்று கூறுகிறார். இதனால் பாரதி ஸ்கூல் வந்து லட்சுமியை பிக் அப் செய்கிறார். அப்போது அவரது ஆசிரியர்கள் லட்சுமியின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பாரதி அவரது டைரி எடுத்து பார்க்கிறார். அதில் கண்ணம்மாவின் புகைப்படத்தினை பார்த்து அதிர்ந்து விடுகிறார். கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என்று அறிந்து கொண்டதும் பாரதிக்கு கோபம் வருகிறது. லட்சுமியை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். முதலில், ஹேமா என்று வீட்டினர் அனைவரும் நினைக்கின்றனர். பின்னர், லட்சுமியை பார்த்ததும் அதிர்ந்து விடுகின்றனர். பாரதி அனைவரிடமும் லட்சுமியின் அம்மாவை இன்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!