பாரதியுடன் வர மறுக்கும் கண்ணம்மா, ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி? இன்றைய எபிசோட்!

0
பாரதியுடன் வர மறுக்கும் கண்ணம்மா, ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி? இன்றைய எபிசோட்!
பாரதியுடன் வர மறுக்கும் கண்ணம்மா, ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி? இன்றைய எபிசோட்!
பாரதியுடன் வர மறுக்கும் கண்ணம்மா, ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி? இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லி பாரதியை சௌந்தர்யா வற்புறுத்துகிறார். ஆனால் ஹேமாவை பார்த்து கொள்ள வேண்டும் என்றால் தான் அங்கு வர முடியாது என்று, கண்ணம்மா பாரதி வீட்டிற்கு வர மறுத்து விடுகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி மற்றும் குடும்பத்தினர் ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர். ஹேமாவை நன்றாக பார்த்து கொள்ளும்படி டாக்டர் கூறி ஹேமாவை வீட்டிற்கு அனுப்பி விடுகிறார். பின், வீட்டிற்கு வந்ததும் ஹேமா சமையல் அம்மா குறித்து கேட்கிறார். இதனால் பாரதிக்கு எரிச்சல் வந்து விடுகிறது. பின், சௌந்தர்யா, வேணு மற்றும் அஞ்சலி என்று அனைவரும் பாரதியிடம் ஹேமாவின் உடல்நிலை குறித்து பேசுகின்றனர்.

தமிழகத்தில் புதிய ரே‌ஷன் கார்டு விண்ணப்பம் – 3 லட்சம் பேர் பதிவு!

ஹேமா நன்றாக உடல்நிலை தேறி வர வேண்டும் என்றால் கண்டிப்பாக கண்ணம்மா அவளுடன் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று பாரதி கேட்டதும், கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வருமாறு வீட்டினர் கூறுகின்றனர். இனி தான் செல்ல முடியாது என்று பாரதி மறுக்கிறார். இதனை கேட்கும் சௌந்தர்யா தாங்கள் அழைத்தால் கண்டிப்பாக கண்ணம்மா வர மாட்டாள் என்றும் அதனால் பாரதி தான் அழைத்து வர வேண்டும் என்று கூறி விடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

பின், ஓரளவிற்கு சமாதானம் அடைந்து பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்லுகிறார். அங்கு கண்ணம்மாவிடம் டாக்டர் ஹேமாவை பற்றியும் கூறியதையும் சொல்கிறார். இதனை அமைதியாக கேட்கும் கண்ணம்மா அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். தனது வீட்டிற்கு வந்து ஹேமாவை பார்த்து கொள்ள வேண்டும் என்று பாரதி கூப்பிட்டதும், கண்ணம்மா அப்படி தன்னால் வர முடியாது என்றும், ஹேமாவை வேண்டுமென்றால் என்னுடன் எனது வீட்டில் விட்டு செல்லுங்கள் என்று கூறி விடுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் பாரதி அமைதியாக சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது. ஏற்கனவே வெளியான ஒரு புகைப்படத்தில் பாரதி, ஹேமா இருவரும் கண்ணம்மா வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போன்று இருந்தது. இதனால் பாரதி ஹேமாவிற்காக கண்ணம்மா வீட்டில் தங்குவார் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here