கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லும் சௌந்தர்யா, பாரதி ஏற்பாரா? இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லும் சௌந்தர்யா, பாரதி ஏற்பாரா? இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லும் சௌந்தர்யா, பாரதி ஏற்பாரா? இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லும் சௌந்தர்யா, பாரதி ஏற்பாரா? இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று ஹேமாவை பார்க்க லட்சுமி ஹாஸ்பிடலுக்கு வருகிறார். லட்சுமியிடம் பேசுவதால் ஹேமாவிற்கு சற்று நிம்மதியாக இருக்கிறது. மறுபுறம் மீண்டும் கண்ணம்மாவை அழைத்து வருமாறு பாரதியிடம் சௌந்தர்யா கூறுகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பாரதி கூப்பிட்டதும் உடனடியாக வந்ததற்கு சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் நன்றி கூறுகின்றனர். நன்றி எல்லாம் தேவையில்லை என்று கூறும் கண்ணம்மா, ஹேமாவை பார்த்து கொள்வது தனது கடமை என்றும் கூறுகிறார். பின், அஞ்சலியை பார்த்து கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறார். அஞ்சலியின் மாற்றம் கண்ணம்மாவிற்கு நிம்மதியினை அளிக்கிறது. பின், ஹேமாவை பார்க்க லட்சுமி துளசியுடன் வருகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 28% DA உயர்வு – நிதி அமைச்சகம் உத்தரவு!

லட்சுமி வந்ததும், ஹேமாவை பார்ப்பேன் என்று அடம்பிடிக்கிறார். லட்சுமியை ஹேமா இருக்கும் அறைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது சௌந்தர்யாவிற்கு இருவரையும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது பிரித்து கூட்டி வந்தது நினைவிற்கு வருகிறது. பின், லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பேசிக்கொள்கின்றனர். பின்பாக, லட்சுமி மற்றும் கண்ணம்மா இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். இனி ஹேமா அமெரிக்கா செல்ல மாட்டாள் என்று லட்சுமி கூறுகிறார். தனக்கு அப்படி தான் தோன்றுகிறது என்றும், இனி தான் ஹேமாவை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

பின், ஹேமா சௌந்தர்யாவிடம் கண்ணம்மா ஊட்டி விட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறார். பாரதி தான் கண்ணம்மாவை போக சொல்லி இருப்பார் என்றும் வருத்தத்துடன் கூறுகிறார். இதனால் பாரதிக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. பின், டாக்டர் ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்து விடுவதாகவும் ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறுகிறார். பின், பாரதியை சென்று கண்ணம்மாவை அழைத்து வருமாறும் கூறுகிறார். இதனால் பாரதிக்கு கோபம் வந்துவிடுகிறது. பின், டாக்டர் ஹேமாவிற்கு கண்ணம்மா தேவை என்றும், அவளுக்கு மருந்தே அவுங்க தான் என்றும் கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பாரதி ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம் என்று சண்டையிடுகிறார். அப்பாவின் கையெழுத்து டிஸ்சார்ஜ் பேப்பரில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறும் போது பாரதி போட மறுத்து விடுகிறார். இதனால் எரிச்சல் அடையும் சௌந்தர்யா வேணுவை கையெழுத்து போட சொல்லுகிறார். பின், கண்ணம்மாவை அழைத்து வருமாறு பாரதியிடம் கூறுகிறார். ஹேமாவிற்காக இதனை செய்து தான் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“ரோஜா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!