தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று அதிரடி திருப்பமாக வெண்பா தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுக்கிறார். இன்னொரு புறம் தனது இரண்டாவது குழந்தையை பற்றி கண்ணம்மா யோசிக்கிறார்.

வெண்பாவின் முடிவு

விஜய் டிவியின் முதன்மையான சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியல் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது தெரிய வருகிறது. இது குறித்து சௌந்தர்யாவிடம் கேட்க நினைக்கிறார், அதே போல் பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதனையும் அறிந்து கொள்கிறார். அஞ்சலி குழந்தை பிறந்ததும் இறந்து விடுவார் என்பது தெரியாமல் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

சன் டிவி சீரியலில் இருந்து விலகிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – இனி இவருக்கு பதில் இவர்!

அடுத்து நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பாரதி & வெண்பா திருமணம் நடைபெறவில்லை என்பதனை நினைத்து கண்ணம்மா வெண்பாவை சீண்டி பார்க்கிறார். இதனால் வெண்பாவிற்கு மிகவும் கோபம் வந்து விடுகிறது. கண்ணம்மாவை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று நினைத்து எரிச்சல் அடைகிறார். அதனால் அஞ்சலி தான் அனைத்திற்கும் காரணம் என்று நினைத்து தான் கொடுத்த மாத்திரையை தினமும் இரண்டினை சாப்பிட சொல்கிறார்.

ஷிவானிக்கு அடுத்து BMW கார் வாங்கிய “பிக்பாஸ்” பிரபலம் – வெளியான புகைப்படம்!

வீட்டிற்கு வந்தும் வெண்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தினை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் துப்பாக்கி எடுத்து தன்னை சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். அப்போது அஞ்சலி வளைகாப்பில் நடந்ததற்கான மன்னிப்பு கேட்க வரும் பாரதி, வெண்பாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து துப்பாக்கியை வாங்கி வைத்து விட்டு திட்டுகிறார். இது தான் சாக்கு என்று வெண்பா தனக்கு யாருமே இல்லை என்றும், அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாரதியிடம் கேட்கிறார். ஆனால், வெண்பா இது பற்றி பேசியதும் பாரதிக்கு எரிச்சல் வந்து வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். இது போன்ற காட்சிகள் தான் அடுத்தடுத்த எபிசோட்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!