ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி, பின் தொடரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி, பின் தொடரும் சௌந்தர்யா - இன்றைய
ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி, பின் தொடரும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி, பின் தொடரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி கண்ணம்மாவிற்கு செடி வாங்கி கொண்டு போக வழியில் கார் ரிப்பேராகி விடுகிறது. அப்போது சௌந்தர்யா அங்கே வந்து பாரதியை தனது காரில் ஏற்றுக் கொண்டு போகிறார். பாரதி கண்ணம்மா வீட்டில் உப்மா சாப்பிட அதனை சௌந்தர்யா மறைந்து நின்று பார்த்து ரசிக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு செல்ல செடி வாங்கி வருகிறார். அப்போது கார் ஸ்டார்ட் ஆகாமல் போகிறது. பாரதியை பின் தொடர்ந்து வந்த சௌந்தர்யா பாரதியை பார்த்து என்னாச்சு பாரதி என்று கேட்க கார் ரிப்பேராகிவிட்டது என்று சொல்கிறார். சௌந்தர்யா தனது காரில் வருமாறு சொல்ல, பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் செடிகளை எடுத்துக் கொண்டு காரில் ஏறுகிறார். இது யாருக்கு என்று சௌந்தர்யா கேட்க என் நண்பனுக்கு என்று சொல்லுகிறார்.

கண்ணம்மா வீட்டிற்கு செல்வது தெரியாமல் இருக்க பாரதி வழியை மாற்றி சொல்லி சமாளிக்கிறார். பின்னர் பாரதி ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு ஆட்டோவில் செல்கிறார். அவரை பின் தொடர்ந்தே சௌந்தர்யா செல்கிறார். பாரதி கண்ணம்மா வீட்டிற்கு ரோஜா செடியுடன் வந்ததை பார்த்து கண்ணம்மா யோசிக்கிறார். அன்று செடிகளை உடைத்தால் தான் வாங்கி வந்திருக்கிறார் போல என்று, ஹேமா, பாரதியை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு – தமிழக டிஜிபி உத்தரவு!

ஹேமா உடனே செடிகளை வைக்க வேண்டும் என சொல்ல பாரதி, கண்ணம்மா, ஹேமா சேர்ந்து செடிகளை வைக்கிறார்கள். அப்போது சௌந்தர்யா அதனை மறைந்து இருந்து பார்க்கிறார். பின்னர் பாரதி வீட்டிற்குள் வந்ததும் ஹேமா, கண்ணம்மா செய்த உப்புமாவை கொடுக்கிறார். சௌந்தர்யா, பாரதிக்கு உப்புமா பிடிக்காதே என்று நினைத்து சிரிக்கிறார். ஆனால் பாரதி, கண்ணம்மா செய்த உப்புமாவை மட்டும் நன்றாக இருக்கு என்று சாப்பிடுகிறார். சௌந்தர்யா அதனை பார்த்து வீட்டிற்கு வா இருக்கு என்று நக்கலுடன் சிரிக்கிறார். உடனே பாரதி அங்கிருந்து கிளம்ப சௌந்தர்யா வருகிறார்.

ஜூலை 31 ஒலிம்பிக்கின் 8ம் நாள் போட்டிகள் – இந்திய வீரர்களுக்கான போட்டிகள் அட்டவணை!

சௌந்தர்யாவை பார்த்து பாட்டி என ஹேமா மகிழ்ச்சி அடைகிறார். இப்போ தான் பாரதி வந்திருப்பான் போல என்று கேட்க, நீங்களும் டாடியும் ஒரே காரில் வந்தீங்களா பாட்டி என ஹேமா கேட்கிறாள். இல்ல நான் வேற கார், அவர் வேற கார் என்று சொல்ல லட்சுமி தூங்கி எழுந்து வருகிறாள். இருவரையும் வெளியே அழைத்து செல்ல கண்ணம்மாவிடம் சௌந்தர்யா கேட்கிறார். அவரும் சரி என்று சொல்ல இரண்டு குழந்தைகளும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!