கண்ணம்மா அருகில் படுக்க சண்டை போடும் ஹேமா, லட்சுமி, ஹேமாவிடம் பேச போன் செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று ஹேமாவிடம் போன் பேச பாரதி, சவுந்தர்யாவின் போனை திருடுகிறார். பின்னர் கண்ணம்மா அருகில் யார் படுப்பது என ஹேமாவும், லட்சுமியும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அனுப்பிட்டு பாரதி ரொம்ப கவலையோடு இருக்கான், ஹேமாவிடம் போன் பேச கூட அவனிடம் கண்ணம்மா நம்பர் இல்லை. அதனால் என்ன செய்யலாம்னு யோசனை செய்திட்டு இருக்கான். மறுபுறம் வெண்பா சாந்தியை பானிபூரி சாப்பிட கூப்பிட, என்னமா நம்ம வாழ்க்கைல அடுத்து என்ன நடக்கும்னு தெரியல ஆனா இப்படி இருக்கீங்களேனு கேக்குற சாந்தி. பாரதி எங்க போனாலும் மறுபடியும் புலம்ப என்கிட்டே தான வரணும்னு வெண்பா சொல்றா.
பாரதி, ஹேமாவிடம் போன் பேச சவுந்தர்யா ரூம்க்கு சென்று அங்க அவருக்கு ஏசி ரிமோட் கொடுத்துட்டு, சவுந்தர்யாக்கு தெரியாம அவரது போனை எடுக்கிறார். ஆனால் அதனை சவுந்தர்யா பார்த்து விட்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பாரதி அங்கிருந்து கிளம்ப வேணு பரவாயில்லை நாம பையனுக்கு பாசம் இருக்குனு சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லை என் போனை எடுக்க தான் வந்துருக்கான் ஏன் என்று வேணு கேட்க, அதுல தான கண்ணம்மா நம்பர் இருக்குனு சொல்லி இரண்டு பேரும் சிரித்துக்கொள்கின்றனர்.
சமையலில் சொதப்பும் சந்தியா; கற்றுக்கொடுக்கும் சரவணன்- இந்த வார ‘ராஜா ராணி 2’ புரோமோ!
ஹேமா மற்றும் லட்சுமி வானத்தில் நிலா நட்சத்திரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது படுக்க இடம் தேர்ந்தெடுக்கும் போது நான் தான் சமையல் அம்மா பக்கத்துல படுப்பேன் என இருவருக்கும் சண்டை வருகிறது. கோவத்தில் லட்சுமி அவங்க என் அம்மா என சொல்ல கண்ணம்மா அங்கே வந்து இரண்டு பேரும் பக்கத்துல படுக்க வழி சொல்கிறார். ஹேமா கண்ணம்மாவிடம் கதை கேட்க, கண்ணம்மா சிங்கம் கதை ஒன்றை சொல்கிறார்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2% ஆக குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – அசாம் அரசு முடிவு!
அதனை கேட்டு இருவரும் தூங்க, கண்ணம்மாவின் போன் அடிக்கிறது. கண்ணம்மா எடுத்து அத்தை என பேச பாரதி ஏதும் பேசாமல் இருக்கிறார். சொல்லுங்க டாக்டர் சார் ஹேமா தூங்குறானு சொல்ல அவ சாப்பிட்டாலா, மருந்து சரியா சாப்பிடுறாளா, நைட் என்ன சாப்பிட என பாரதி கேள்விகேட்கிறார். கண்ணம்மா அதற்கு பதில் கூற இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!