அஞ்சலியின் குழந்தையை கொல்ல திட்டமிடும் வெண்பா – காப்பாற்றுவாரா அகிலன்?

0
அஞ்சலியின் குழந்தையை கொல்ல திட்டமிடும் வெண்பா - காப்பாற்றுவாரா அகிலன்?
அஞ்சலியின் குழந்தையை கொல்ல திட்டமிடும் வெண்பா - காப்பாற்றுவாரா அகிலன்?
அஞ்சலியின் குழந்தையை கொல்ல திட்டமிடும் வெண்பா – காப்பாற்றுவாரா அகிலன்?

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தற்போது அகிலனை பழிவாங்க அஞ்சலிக்கு வயிற்றில் குழந்தையே இல்லாமல் போவதற்கு மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. தற்போது ராஜா ராணியும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. அகிலனுக்கு வெண்பா இங்கு வந்தது சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதுவும் பாரதியை பற்றி கூட்டத்தில் சொன்னது கோபமடைய செய்தது. இதனால் கடுப்பில் பாரதிக்கு கால் செய்து திட்டுகிறார். பின் அஞ்சலியிடம் குழந்தை பிறக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சியுடன் பேசிகொண்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ssc

அடுத்ததாக அர்ச்சனா, செந்திலை காட்ட இருவரும் பேசிக்கொண்டுள்ளனர். அதில் இதுவரையிலும் தன்னிடம் மறைத்த விஷயத்தை பற்றி செந்தில் கேட்க, அதற்கு மனதில் அத்தையை ஜெயிலுக்கு அனுப்பியது நான் தான் என்று நினைத்துக் கொள்கிறார். அடுத்ததாக செந்தில் செம ரொமான்ஸ் மூடில் இருக்க இன்றைக்கு ராத்திரி எப்படி இவரிடம் இருந்து தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டுள்ளார். வெண்பாவிடம் மருந்து கேட்கலாம் என்று அவரிடம் செல்கிறார்.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு புதிய வலைத்தளம் – இன்று முதல் பயன்பாடு!!

அப்பொழுது வெண்பா வேலைக்காரியுடன் பேசிக்கொண்டுள்ளார். அதாவது அகிலன் தன்னிடம் முறைத்து கொண்டே இருக்கிறான். அவனுக்கு ஏதாச்சும் பெருசா பண்ணனும் என்று சொல்லி ஒரு மாத்திரையை எழுதி தருகிறார். அஞ்சலி வயித்துல இருக்க குழந்தையை ஒண்ணுமில்லாமல் ஆக்குவேன் என்றும் சொல்கிறார். அடுத்து அர்ச்சனா அங்கு வர தனக்கு குழந்தை தங்காமல் இருக்க மாத்திரை வேண்டும் என்று சொல்கிறார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு – பெற்றோர்கள் கோரிக்கை!

வெண்பா அதற்கும் சேர்த்து மாத்திரை எழுதி தருகிறார். வேணு சௌந்தர்யாவிற்கு கால் செய்து நடந்தவற்றை சொல்ல அந்த வெண்பாவை ஒரு பொருட்டாக கூட யாரும் மதிக்காதீர்கள் என்று சொல்கிறார். வெண்பா வேலைக்காரி மாத்திரைகளை வந்து தருகிறார். ஒரு மாத்திரை அர்ச்சனாவிற்கு, மற்றொரு மாத்திரை அஞ்சலிக்கு என்று எடுத்து வைக்கிறார்.

அஞ்சலி குழந்தைக்கு என் கையாள தான் ஆப்பு. ஆரம்பத்துல அவ எப்படி இருந்தானு எனக்கு தெரியாதா?? இப்போ புதுசா திருந்திட்டா விட்ருவோமா?? என்று சிரித்துக் கொள்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!