கர்ப்ப காலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
கர்ப்ப காலத்தில் 'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் போட்டோஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்!
கர்ப்ப காலத்தில் 'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் போட்டோஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்!
கர்ப்ப காலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்!

“பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான், நடிகை பரீனா. இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதை தொடர்ந்து வித விதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு கலக்கி வருகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி அல்லது சீரியல்களில் நடித்து வந்த பலர் தற்போது முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சீரியலான “பாரதி கண்ணம்மா” வில் அழகான வில்லியாக இருந்து வருபவர் தான், நடிகை பரீனா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும், அவரது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த சீரியல் என்றால், அது “பாரதி கண்ணம்மா” தான்.

‘மீராவின் அப்பா உயிர் பிழைக்க மாட்டார்’ என கூறிய சாமியார் – “கண்ணான கண்ணே” ப்ரோமோ!

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகன் பாரதிக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தைகள் இருப்பது தெரிந்தும், துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். இவரது நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. இப்படியாக இருக்க, பரீனா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியினை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், மற்ற நடிகைகளை போல தனது கர்ப்ப காலத்தில் விதவிதமான போட்டோஷூட் நடத்தி வருகிறார். ஆனால், மற்றவர்களை விட சற்று அதிகப்படியாகவே இவர் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதில் ஒரு போட்டோஷூட்டில் தனது வயிற்றில் மெஹந்தி போட்டு போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். பலர் இதனை ஆதரித்தாலும், சிலர் இந்த காலகட்டத்தில் சரியான உணவுமுறை மற்றும் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இது போன்ற நடந்து கொள்வது தவறானது என்றும் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!