‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!

பாரதி கண்ணம்மா சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பரீனா

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் கருப்பு நிற தோற்றத்தை பெண்ணின் பிரச்சனைகளை வைத்து ஒளிபரப்பான கதைக்களம். அதன் பிறகு அப்பாவி பெண்ணான கண்ணம்மாவை மோசமானவருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் போது கதையின் நாயகன் பாரதி வந்து விடுகிறார். பிறகு பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி எபிசோடுகள் தொடர்ந்தது. விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா டாப் ரேட்டிங் டிஆர்பி முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி ‘கயல்’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இது வரை பாரதி கண்ணம்மா சீரியல் 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் சீரியலில் நெகட்டிவ் ரோலில் வெண்பா கேரக்டரில் நடிக்கும் பரீனா தான். இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர் கூட்டம் அதிகம். இவர் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக உள்ளார். இவர் கர்ப்பமாக உள்ள புகைப்படங்களை அவ்வப்போது தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலை மீண்டும் பின்னுக்கு தள்ளிய ‘பாரதி கண்ணம்மா’ – TRP ரேட்டிங்!

இவர் கர்ப்பமாக உள்ளதால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகை பரீனா நான் சீரியலில் இருந்து விலக மாட்டேன் வெண்பா கேரக்டரில் தொடர்ந்து நானே நடிப்பேன் என்று தெரிவித்தார். தற்போது சீரியலில் இருந்து பரீனா விலகியுள்ளதாக, சீரியலில் வெண்பாவிற்கு வேலைக்காரி கேரக்டரில் நடிக்கும் புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மிஸ் யூ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!