‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா வெளியிட்ட குழந்தையின் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா வெளியிட்ட குழந்தையின் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா வெளியிட்ட குழந்தையின் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகை ஃபரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இவரது பிரசவத்திற்கு முன்னதாக வயிற்றில் குழந்தையுடன் எடுத்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபரீனாவின் குழந்தை:

பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக சின்னத்திரையின் சூப்பர் ஹிட் வில்லியாக மாறியுள்ளவர் நடிகை ஃபரீனா. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வெண்பா கதாபாத்திரம் பார்க்கும் அனைவரையும் கோபமடைய செய்யும் அளவிற்கு இருக்கும். வில்லத்தனத்தில் வெள்ளித்திரை நடிகையரையே மிஞ்சி விடும் அளவிற்கு மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்துபவர். வெண்பா கதாபாத்திரத்தின் மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பரிட்சயமானவராகி விட்டார்.

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் “மாகாபா ஆனந்த்” வாங்கும் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

ஃபரீனா மற்றும் அவரது கணவருக்கும் கடந்த வாரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரது பிரசவத்திற்கு ஒரு சில நாட்கள் வரையிலும், ஃபரீனா தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது கர்ப்ப காலத்தில் வித்தியாசமான முறையில் பல்வேறு போட்டோஷூட்களையும் நடத்தினார். இதனால் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளானார். ஆனாலும் தனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஃபரீனா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவு செய்து வந்தார்.

ப்ரியங்கா, தாமரையை குறி வைக்கும் ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் – இந்த வார நாமினேஷன்! வெளியான 3வது ப்ரோமோ!

அதேபோல், வயிற்றில் இருக்கும் ஃபரீனாவின் குழந்தையை அவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் வயிற்றுக்குள் இருந்த படியே அங்கும், இங்கும் சுற்றி சுற்றி வருவது போல் உள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘வெண்பா’ ஃபரீனாவின் குழந்தையை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ மூலமாக ஃபரீனா மற்றும் அவரது கணவருக்கும் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!