‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பரினா குழந்தை பிறந்ததற்கு பிறகு தற்போது லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் வீடீயோவை பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ பரினா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் பலரையும் கவர்ந்து இருக்கும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் தற்போது பலரும் எதிர்பார்த்திருந்தது போலவே பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக கோர்ட் உத்தரவின் படி வாழ்ந்து வருகின்றனர். இருவருக்குமான காதல் காட்சிகள் அமைக்கப்பட்டு பலரையும் ஈர்த்து வருகிறது. புதிய கண்ணம்மாவாக களம் இறங்கி இருக்கும் நடிகை வினுஷாவை மக்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜெனிபர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஆனால் அவரது எதார்த்த நடிப்பின் காரணமாக தற்போது அவர் தனக்கு என்ற ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். தற்போது பாரதி தான் கண்ணம்மாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறார். பல நாட்களுக்கு பிறகு பாரதியின் மனதில் கண்ணம்மா பற்றிய நல்லெண்ணம் தோன்றி வருகிறது. சீரியலில் இப்படி பல திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பரினா குழந்தை பிறப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இந்த சீரியலில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவரது காட்சிகள் எடுக்கப்படாமல் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா யார் தெரியுமா? சீரியலில் சாதித்த கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

குழந்தை பிறப்பதற்கு சிறிது நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் கூட பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது பல நாட்களுக்கு பிறகு ஒரு வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புதிய அம்மாவாக தனது ஊட்டச்சத்து மற்றும் எனர்ஜிக்கு தான் பயன்படுத்தும் ஹெல்த் மிக்ஸ் பற்றி ரீல்ஸ் செய்துள்ளார். அதன் பயன்களையும் அதனை எப்படி செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ பலருக்கும் உதவியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!