‘பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க’ – வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!

0
'பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க' - வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!
'பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க' - வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!
‘பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க’ – வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரீனா. அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை பரீனா. தற்போது நிஜ வாழ்க்கையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு சர்ப்ரைஸாக வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அவர்களது நண்பர்கள், பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன் பின்னர் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் வளைகாப்பு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா & சரவணன், மீண்டும் சேர்த்து வைத்த பயணம் – ராஜா ராணி 2 ப்ரோமோ!

முதலில் பாரதியாக நடிக்கும் அருண் வந்து வளைகாப்பு செய்கிறார். சந்தனம் தடவி அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்கிறார். அதன் பின்னர் பரீனாவிற்கும் அவரது கணவருக்கும் அரிசி தூவி ஆசிர்வாதம் செய்கிறார். அதன் பின்னர் அவரை அருகில் அமர வைத்துவிட்டு கண்ணம்மாவாக நடித்த ரோஷினியை வர வைக்கின்றனர். அவர் வந்து ஆசிர்வாதம் செய்துவிட்டு பரீனாவை பற்றி புகழ்ந்து பேசுகிறார்.

ராதிகா புதிய கார் வாங்க உதவி செய்யும் கோபி,ஜெனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அவர் மாசமாக இருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த விதத்திலும் சோர்வாக இருந்ததில்லை என புகழ்ந்து செல்கிறார். மேலும் பரீனா இந்த சீரியலுக்காக தாங்கி கொண்ட கஷ்டங்களை பற்றி சொல்கிறார். நான் எப்பவும் போல தான் இருப்பேன் எனவும் கூறுகிறார். மேலும் தனக்கு லேபர் வலி சுத்தமாக இருக்காது என சொல்வாராம். அதன் பின்னர் பரீனாவின் கணவர் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். பரீனா குழந்தை பிறந்து சென்ற பின்னால் எப்படி மிஸ் செய்வீங்க என கேட்டதற்கு, அவரை நாங்க மிஸ் செய்ய மாட்டோம் என சொல்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!