கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா – வெளியான புகைப்படங்கள்!

0
கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா - வெளியான புகைப்படங்கள்!
கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா - வெளியான புகைப்படங்கள்!
கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா – வெளியான புகைப்படங்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் லிசாவின் பிறந்தநாள், பாரதி கண்ணம்மா செட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் 8 வருடங்களுக்கு பின் பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. மேலும் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்ட கண்ணம்மாவிற்கு ஹேமா தான் உன்னுடைய இரண்டாவது குழந்தை என வெளிப்படையாக சௌந்தர்யா உண்மையை சொல்கிறார். மேலும் ஹேமா உன்னை போலவே இருப்பதாக சௌந்தர்யா சொல்ல, கண்ணம்மா ஹேமாவை பார்க்க சென்று அவளை அழைத்து செல்வேன் என உறுதியாக இருக்கிறார்.

பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

இந்நிலையில் ஹேமா கதாபாத்திரத்தில் லிசா நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் அவர் விஜய் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பாரதி கண்ணம்மா நட்சத்திரங்களுடன் வீடியோ செய்து அசத்தி வரும் லிசா தனது, அசாதாரண நடிப்பின் மூலம் பலரது பாராட்டுகளை பெற்றார். அது மட்டுமில்லாமல், அவரது பாட்டியாக நடிக்கும் ரூபா ஸ்ரீயும், ஷூட்டிங்க்கு நடுவே செய்திருக்கும் காமெடி வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

லிசாவிற்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்துள்ளது. அதில் பாரதி கண்ணம்மா நடிகர்கள் பலர் சேர்ந்து பாரதி கண்ணம்மா செட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்கள் ஹேமா லிசா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹேமாவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!