சீரியல் நடிகை பரினாவின் கர்ப்பகால பாத் டப் போட்டோ ஷூட் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
சீரியல் நடிகை பரினாவின் கர்ப்பகால பாத் டப் போட்டோ ஷூட் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
சீரியல் நடிகை பரினாவின் கர்ப்பகால பாத் டப் போட்டோ ஷூட் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
சீரியல் நடிகை பரினாவின் கர்ப்பகால பாத் டப் போட்டோ ஷூட் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல் வரலாற்றிலேயே ஒரு முக்கியமான வில்லியாக மக்களின் மனம் கவர்ந்த நடிகை பரினா தற்போது பாத் டப்பில் அமர்ந்த படி கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

போட்டோ ஷூட்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அழகான வில்லி நடிகை பரினா கடந்த சில மாதங்களுக்கு முன்னாக தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்தார். இதையடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை பொழிய, மிகவும் உற்சாகத்தோடு தனது வில்லி பணியை சிறப்பாக செய்து வருகிறார். பொதுவாக நடிகைகளின் கர்ப்ப காலங்களில் சினிமாவை விட்டு சில காலங்கள் ஒதுங்கி இருக்கும் சூழலில் இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!

அந்த வகையில் குழந்தையை பிரசவிக்க இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் நடிகை பரினா வழக்கமான கர்ப்பகால நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்து அவற்றை சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வயிற்றில் மருதாணியிட்டு கருப்பு நிற உடையில் வித்தியாசமான வகையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்திருந்தார்.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து தற்போது அடுத்த மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்களை பாத் டப்பில் வைத்து வித்தியாசமாக படம்பிடித்துள்ளார் பரினா. அந்த புகைப்படங்களில் மஞ்சள் நிற தேவதையாக ஜொலிக்கும் பரினா, பாத் டப்பில் பூக்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பவாறு தோன்றியுள்ளார். மேலும் போட்டோ ஷூட் புகைப்படங்களை காணொளியாக மாற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பரினாவை அழகாக இருப்பதாக வர்ணித்து வரும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!