கணவரை 2 ஆண்டாக பிரிந்த ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – வைரலாகும் வீடியோ!

0
கணவரை 2 ஆண்டாக பிரிந்த 'பாரதி கண்ணம்மா' பரீனா - வைரலாகும் வீடியோ!
கணவரை 2 ஆண்டாக பிரிந்த 'பாரதி கண்ணம்மா' பரீனா - வைரலாகும் வீடியோ!
கணவரை 2 ஆண்டாக பிரிந்த ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் ரகுமான் என்பவருடன் திருமணம் ஆன நிலையில், தனது கணவர் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. அவர் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ரகுமான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் தன் கணவரின் புகைப்படத்தை கூட பகிர்ந்து கொள்ளாமல் இருந்தார்.

கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் – மாநில அரசு அறிவிப்பு!

இதற்கு காரணம் அவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து இருந்தார்களாம். அதாவது, கல்யாணம் ஆன சில மாதங்களிலே பரீனாவும் அவரது கணவர் ரகுமானும் பிரிந்து இருந்துள்ளனர். தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கதைப்போமா மந்திரத்தை யூஸ் பண்ணி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி இணைந்துள்ளனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்து மீண்டும் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதை மிகவும் உணர்வுப் பூர்வமாக பரீனா பதிவு செய்திருந்தார். “எனது கணவரை நான் இந்த பிரச்சனையால பல இடங்களில் விட்டுக்கொடுத்து பேசி இருக்கிறேன். ஆனால் அவர் என்னை யாரிடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. இந்த புரிதல் தான் எங்களை மீண்டும் இணைத்தது” என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி, வீடியோ எடுத்து பல மாதங்கள் ஆன நிலையில் அவரது கர்ப்ப கால ஃபோட்டோஷூட்டுக்கு பின்பு அவர் குறித்த அனைத்து வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!