“பாரதி கண்ணம்மா” பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் – ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாரதி கண்ணம்மா" பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் - ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்தவர் அகிலன். அவர் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தொடர்ந்து 3 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அகிலன்:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியின் தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அகில். அவர் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அந்த கேரக்டரில் சுகாஷ் என்பவர் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில், தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. அதாவது, சினிமாவில் நடிப்பதற்காக தான் அவர் சின்னத்திரை பக்கம் வந்தாராம். அதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தற்போது விலகி உள்ளார்.

குக் வித் கோமாளி ‘சிவாங்கி’ Anchor ஆக அவதாரம் – அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் சின்னத்திரைக்கும், திரைப்படங்களுக்கு நிகரான ஆதரவு கிடைத்து வருகிறது. இருந்தாலும் அகிலனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என ஒரே லட்சியமாக இருக்கிறது. அதனால் தான், இவ்வளவு பிரபலமான சீரியலில் இருந்து விலகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப் சீரியல் வரிசையில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் இன்றைய எபிசோட் – வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து விலகிய அகிலன் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து பகீரா, விஷாலுடன் இணைந்து வீரமே வாகை சூடும், பீட்சா 3 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதனால் அவர் சின்னத்திரையில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவர் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!