பாரதியுடன் மீண்டும் இணைந்த கண்ணம்மா – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

0
பாரதியுடன் மீண்டும் இணைந்த கண்ணம்மா - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
பாரதியுடன் மீண்டும் இணைந்த கண்ணம்மா - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
பாரதியுடன் மீண்டும் இணைந்த கண்ணம்மா – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிரிந்திருக்கும் ஜோடிகள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, இதிலாவது இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் TRP ரேட்டிங்கை உச்சத்தில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு பாரதி கண்ணம்மா சீரியலுக்கு உண்டு. சுய மரியாதைக்காக கணவனை விட்டு விலகிய பெண், ஒருவரது ஆதரவும் இல்லாமல் பெண் குழந்தையுடன் சமுதாயத்தில் தனித்து வாழ்ந்து காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் 8 ஆண்டுகளுக்கு முன்னாக பிரிந்த பாரதி மற்றும் கண்ணம்மா ஜோடி தற்போது மீண்டுமாக இணைகிறவாறு எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!

அதாவது அஞ்சலியின் சீமந்த நிகழ்வுக்கு வரும் கண்ணம்மா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இருவரும் எப்போது தான் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய் டிவி “மௌன ராகம் 2” தொடரில் முக்கிய நடிகர் மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி இருவரும் சீரியல் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைந்து விட்டார்களா என்று உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். தவிர, சீரியலில் இணையாத பாரதி, கண்ணம்மா இருவரும் இந்த புகைப்படத்திலாவது இணைந்திருக்கிறார்கள் என சந்தோஷப்பட்டு கொள்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!