“மீண்டும் இணையும் பாரதியும் கண்ணம்மாவும்” – நெகிழ்ச்சியான தருணங்களுடன் இன்றைய எபிசோட் !

0
"மீண்டும் இணையும் பாரதியும் கண்ணம்மாவும்" - நெகிழ்ச்சியான தருணங்களுடன் இன்றைய எபிசோட் !
“மீண்டும் இணையும் பாரதியும் கண்ணம்மாவும்” – நெகிழ்ச்சியான தருணங்களுடன் இன்றைய எபிசோட் !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி கண்ணம்மாவை அழைத்து வர அவரது வீட்டிற்கு செல்லுகிறார். கண்ணம்மாவை பார்த்ததும் மகிழ்ச்சி அடையும் ஹேமா கண்விழிக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி சென்று தான் கண்ணம்மாவை அழைத்து வர வேண்டும் என்று வீட்டினர் தெரிவித்து விடுகின்றனர். இதனால் பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்லுகிறார். பாரதியை தனது வீட்டில் எதிர்பாராத கண்ணம்மா, ஹேமாவை பற்றி பாரதி கூறியதும் பதட்டமடைந்து விடுகிறார். ஹேமாவின் நிலைக்கு பாரதி தான் காரணம் என்று கண்ணம்மா கூறுகிறார். இதனை கேட்டு பாரதிக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. பின், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக காரில் பயணிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறப்பு – இன்று முதல் அனுமதி!!

காரில் பதட்டத்துடன் பாரதி செல்லும் போது எதிரில் ஒருவரை இடித்து விடுகிறார். இதனால் எதிரில் வந்தவர் கோபத்துடன் பாரதியை திட்டி விடுகிறார். பாரதி சண்டைக்கு போகும் போது கண்ணம்மா அவரை சமாதானம் செய்து அழைத்து செல்லுகிறார். பின், பாரதி வேகமாக கார் ஒட்டி சென்றதாக போலீசார் அவரை கொள்கின்றனர். அப்போது கண்ணம்மா போலீசாரிடம் பதமாக பேசி பாரதியை அழைத்து வருகிறார். பின், இருவரும் ஒன்றாக ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது வெண்பா இருவரையும் தடுக்கிறார். இதனால் கோபம் அடையும் பாரதி குடும்பத்தினர் அவரை திட்டி விடுகின்றனர். பின், கண்ணம்மா ஹேமாவை பார்க்க செல்லுகிறார். ஹேமாவின் நிலையினை பார்த்து கண்ணம்மாவிற்கு அழுகை வந்து விடுகிறது. கண்ணம்மா ஹேமாவிடம் பேச்சு கொடுக்கிறார். இனி தான் ஹேமாவை விட்டு செல்ல மாட்டேன் என்றும் கூறுகிறார். அப்போது கண் விழிக்கும் ஹேமா கண்ணம்மாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here