பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் – அகிலன் ஓபன் டாக்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் - அகிலன் ஓபன் டாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் - அகிலன் ஓபன் டாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் – அகிலன் ஓபன் டாக்!

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில், அகிலன் கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில் அதில் முன்னதாக நடித்த அகில் தற்போது மனம் திறந்து ஒரு பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

நடிகர் அகில்:

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்தவர் அகிலன். சீரியலிலும் அதே பெயரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியலில் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும் கண்ணம்மாவின் குழந்தை பற்றிய உண்மை தெரிந்தவர்களின் இவரும் ஒருவராக இருக்கிறார். கண்ணம்மாவிற்கு ஆதரவாக இவர் பல இடங்களில் இருந்துள்ளார். இவ்வளவு முக்கிய கதாபாத்திரத்தில் இருந்து இவர் சமீபத்தில் விலகி உள்ளார்.

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வளைகாப்பு விழா – ரசிகர்கள் வாழ்த்து!

இது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு, ஒரு வீடியோவில் பதிலளித்து பதிவிட்டார். அதில் அவருக்கு சின்னத்திரையை விட வெள்ளித்திரை படங்களில் நடிப்பது தான் லட்சியமாக இருப்பதாகவும், தற்போது நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளதால் இந்த சீரியலில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக அவர் தெரிவித்தார். இது பற்றி இரண்டு வீடியோக்களை அவர் பதிவிட்டார். அவரின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

பரிகாரம் இறுதியில் மயங்கி விழும் ரோஜா – வெளியான “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!

இந்நிலையில் அவரை தனியார் யூடுப் சேனல் ஒன்று பேட்டி ஒன்றை எடுத்தது. அதில் நன்றாக பேசிய அவர், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கேட்டதற்கு, பாரதி கண்ணம்மாவில் நடிப்பதற்கு எனக்கு சீன் தரவில்லை என மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆனால் சினிமாவில் வருவதற்காக தான் நான் சீரியலில் இருந்து விலகி உள்ளேன் என தெளிவாக கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!