பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!

0
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பள விவரம் குறித்த பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சம்பள பட்டியல்:

பொதுவாக வெள்ளித்திரை சினிமாக்களுக்கு ஒரு மதிப்பும், தனி ரசிகர்கள் கூட்டம் என்று இருந்தாலும், அதே அளவுக்கு சின்னத்திரை தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள், அன்றாட பிரச்சனைகள், குடும்ப சிக்கல்கள் போன்றவற்றை நம் அருகில் இருந்து பார்த்தபடியே திரையில் காட்டுவது இந்த சின்னத்திரைகள் தான்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரவுள்ள அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

அந்த வகையில் தமிழ் மொழியில் உள்ள எண்ணற்ற டிவி சேனல்கள் மக்களின் விருப்பமாக இருந்து வரும் சூழலில், விஜய் டிவிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ தொடருக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு ஏராளம். அதாவது பெண்களுக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், குடும்பம் மற்றும் வெளி இடங்களில் அவர்களுக்கு உருவாகும் பிரச்சனைகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வருபவர்கள் பெரிய, அறிமுகம் வாய்ந்த நடிகர், நடிகைகள் கிடையாது. இதில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை ரோஷினி, பாரதியாக வரும் அருண் பிரசாத், அகிலாக நடித்து வரும் அகில், அஞ்சலியாக நடித்து வரும் ஸ்வீட்டி என பலரும் புது முகங்கள் தான். இந்த சீரியல் மூலம் தான் இவர்கள் அனைவருக்கும் தற்பொழுது ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவும், அன்பும் கிடைத்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் மக்களின் விருப்பமான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, ரோஷினி ரூ.20,000, அருண் பிரசாத் ரூ.20,000, சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரூபா ஸ்ரீ ரூ. 15,000, வேணு கதாபாத்திரத்தில் வரும் ரிஷி கேசவ் ரூ.12,000, வெண்பாவாக வரும் பரீனா ரூ.10,000, அகிலன் ரூ.10,000, ஸ்வீட்டி ரூ.9000மும் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!