‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா கர்ப்பமானது தெரியாமல் நடந்த சம்பவம் – கணவரின் ஓபன் டாக்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரீனா கர்ப்பமானது தெரியாமல் நடந்த சம்பவம் - கணவரின் ஓபன் டாக்!
'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரீனா கர்ப்பமானது தெரியாமல் நடந்த சம்பவம் - கணவரின் ஓபன் டாக்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா கர்ப்பமானது தெரியாமல் நடந்த சம்பவம் – கணவரின் ஓபன் டாக்!

தற்போதைய ட்ரெண்டிங்கில் எங்கு திரும்பினாலும் இணையம் முழுவதும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் பிரபலங்களை பற்றிய செய்தி தான் பரவி வருகிறது. தற்போது ஃபரீனாவின் கணவர் ரஹ்மான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்ததை இந்த பதிவில் காண்போம்.

ட்ரெண்டிங் நடிகை:

சின்னத்திரையில் தற்போது மிகவும் பிரபலமாகவும், மக்கள் கூர்ந்து கவனிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ஃபரீனா. ஃபரீனா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் முன்னதாக கலந்து கொண்டுள்ளார். அப்போது முதல் ஃபரீனாவின் தனித்திறமை காரணமாக மக்கள் அவரை கவனிக்க தொடங்கினர். சமையல் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கியது அவரை பெண்கள் மத்தியில் மேலும் பிரபலமாக சென்று சேர்த்தது. முன்னதாக இதேபோல் ஒரு சீரியலிலும் நடித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி அறிவிப்பு வெளியீடு!

ஆனால் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழின் உச்சத்தில் உள்ளார். இது தவிர எப்போதும் பல போட்டோஷூட்களிலும் கலந்து கொள்வார். ஆனால் ஃபரீனா கர்ப்பமானதிற்கு பிறகு, மிகவும் வித்தியாசமான தீம்களில் போட்டோஷூட்களை நடத்தினார். இதனால் கர்ப்ப காலத்தில் இது போன்ற ஆபத்தான ஷூட்களை தவிர்க்குமாறு ஒரு தரப்பினரும், இது தேவையா என்று ஒரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் ஃபரீனா தனக்கு பிடித்ததை மட்டுமே செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஃபரீனா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை – 10வது தவணை வரவு, அறிந்து கொள்வது எப்படி?

தற்போது ஃபரீனாவின் கணவர் ரஹ்மான், ஃபரீனா கர்ப்பமானது தெரிவதற்கு முன்னதாக நடந்த சம்பவங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கர்ப்பமானது தெரியாமல் ஒரு நாள் இரவு 11 மணிக்கு மேல் பிரியாணி, அத்தோ என்று செம்மையாக சாப்பிட்டுவிட்டு திணறி விட்டார். பின்னர் சிறிது நேரத்திலேயே வாந்தியும் எடுத்து விட்டார். அப்போது சாப்பாடு சேர்க்கவில்லை என்று தான் நினைத்தோம். ஆனால் 2 நாட்களுக்கு பின்னர் தான் ஃபரீனா கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு தெரிய வந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!