அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!

உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குடும்ப அட்டைத்தார்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் 2022 ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்து உள்ளது.

முக்கிய அப்டேட்:

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் உணவு தானியங்களை மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதார அடிப்படையில் சர்க்கரை அட்டை, அரிசி அட்டையை பொறுத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 1.35 கோடி மக்கள் பயனடைகின்றனர்.

தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு? கல்லூரி மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று!

இத்திட்டம் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசாங்கம் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இலவச ரேஷன் பொருட்களை ஏழை எளிய மக்கள் பெற்று வருகின்றனர். இத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை நாம் எப்போதும் அப்டேட் உடன் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால், உணவு தானியங்களையும் நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு ஒரிஜினல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் ஆகியவை தேவை. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி முதலில் மார்ச் 31 ஆக இருந்தது. ஆனால் நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். எனவே தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

1.முதலில்  uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் ( முக்கிய ஆவணங்கள் தேவை)

2.அடுத்து தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி வரும்.

3.அந்த ஓடிபி நம்பரைப் பதிவிடுவதன் மூலம் எளிதாக ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைத்து விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!