வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் விடுமுறை – மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் வங்கி சேவை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. என்னதான் நாம் டிஜிட்டல் முறையில் பண பரிவர்தன்னை செய்து வந்தாலும் சில முக்கிய வேலைகளுக்கு நாம் வங்கிக்கு நேரடியாக தான் செல்ல வேண்டும் அதனால் நாம் வங்கி வேலை நாட்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. இப்பதிவில் ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களை பார்ப்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் வங்கிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை தினம் மாறுபடுகிறது. அதில் தேசிய விடுமுறைகள் மட்டுமே ஒன்றாக அமையும். இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து வங்கிகளுக்கான விடுமுறை நாட்களையும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரப் போகும் ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும், ஏடிஎம் வாயிலாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் அதற்கு எவ்வித தடையும் இருக்காது. நாட்டில் வங்கி சேவை என்பது அவசியமாக இருப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் கட்டாயம் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் விடுமுறை பட்டியலில் வார விடுமுறை நாட்களும் குறிப்பிடபட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

01.08.2022 – துருபகா ஷீ-ஜி விழா விடுமுறை

07.08.2022 – ஞாயிறு விடுமுறை

08.08.2022 – முஹர்ரம் பண்டிகை ஜம்மு மற்றும் ஸ்ரீ நகரில் வங்கிகளுக்கு விடுமுறை

09.08.2022 – சண்டிகர், டேராடூனில் விடுமுறை

11.08.2022 – ரக்ஷா பந்தன் விடுமுறை

13.08.2022 – 2ம் சனிக்கிழமை விடுமுறை

14.08.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

15.08.2022 – சுதந்திர தின விழா விடுமுறை

16.08.2022 – பார்சி புத்தாண்டு மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை

18.08.2022 – ஜென்மாஷ்டமி விழா விடுமுறை

21.08.2022 – ஞாயிறு விடுமுறை

28.08.2022 – ஞாயிறு விடுமுறை

31.08.2022 – விநாயகர் சதுர்த்தி விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here