பொதுமக்களுக்கு அலர்ட்.. வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும்.. காரணம் இது தான்!
இந்தியாவில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 6 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
வேலை நிறுத்தம்
இந்தியாவில் பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக செய்கின்றனர். ஆனால் ஒரு சில பரிமாற்றங்களுக்கு வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலைமை இருக்கும். அவ்வாறு டிசம்பர் மாதம் வங்கி செல்ல திட்டமிடுவோருக்கு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது டிசம்பர் மாதம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் 6 நாட்கள் வங்கிகள் செயல்பாடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு குஷியான அப்டேட்!!
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2023 டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் பாதிக்கப்படலாம் எனவே பொதுமக்கள் உடனே வங்கி சேவைகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த வங்கிகள் மூடப்படும் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது,
- டிசம்பர் 4– ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
- டிசம்பர் 5 – பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா
- டிசம்பர் 6 – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி
- டிசம்பர் 7 – யூகோ வங்கி மற்றும் இந்தியன் வங்கி
- டிசம்பர் 8 – பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
- டிசம்பர் 11 – இந்த வங்கிகள் தவிர, தனியார் வங்கிகள் வேலை நிறுத்தம்.