வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தந்த வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளது. மற்ற மாதங்களுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் பண்டிகை தினங்கள் இருக்கின்றன. எப்போதுமே இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களை சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வங்கி விடுமுறை அனைத்து மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை. எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு செல்லும் போதே எந்தெந்த மாநிலத்திற்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொண்டு செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையினருக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி விடுமுறை நாட்களை பார்க்கலாம்,
  • செப்டம்பர் 1 – விநாயக சதுர்த்தி (2வது நாள்) காரணமாக கோவாவின் பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்க்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
  • செப்டம்பர் 7 மற்றும் 8 – ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி காரணமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 21– ஸ்ரீ நாராயண குரு சமாதி திவாஸ் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 26 – நவராத்திரி ஸ்தாபனம் காரணமாக மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!