ஏப்ரல் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

0
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - முழு பட்டியல் இதோ!
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

இப்போது மாநிலங்களுக்கான விடுமுறைகள் மற்றும் வார இறுதி விடுமுறைகள் உட்பட ஏப்ரல் மாதத்தில் மீதமிருக்கும் 10 நாட்களில் சுமார் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம்.

விடுமுறை பட்டியல்:

புதிய நிதியாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மத மற்றும் சமூக விழாக்கள் கொண்டாடப்பட்டதால் ஏப்ரல் மாதத்தில் பல வங்கி விடுமுறைகள் இருந்தன. இந்த நாட்களில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த மாதத்தில் மொத்தம் 15 வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் 11 விடுமுறைகள் முடிவடைந்து விட்டது. ஏறக்குறைய ஏப்ரல் மாதமும் இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருப்பதால் இம்மாதத்தில் இன்னும் நான்கு வங்கி விடுமுறைகள் மீதியாக இருக்கிறது.

ExamsDaily Mobile App Download

அந்த வகையில் கரியா பூஜையை முன்னிட்டு திரிபுராவில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி திரிபுராவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஏப்ரல் 21 அன்று கரியா பூஜையை முன்னிட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடாவை முன்னிட்டு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏப்ரல் 29 அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை – உடனே விரையுங்கள்..!

மற்ற பகுதிகளில் வங்கிகள் வழக்கம் போல வேலை நாளாக செயல்படும். தொடர்ந்து ரிசர்வ் வங்கி தயாரித்த பட்டியலின்படி ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அந்த பட்டியலின்படி, நடைமுறைக்கு வரும் பிராந்திய விடுமுறைகள் தவிர ஏப்ரல் 23 நான்காவது சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமையில் வங்கிகள் மூடப்பட இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை, விடுமுறையை கணக்கில் கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here