FD கணக்கில் 7.25% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

0
FD கணக்கில் 7.25% வரை வட்டி தரும் வங்கிகள் - முழு விவரம் இதோ!
FD கணக்கில் 7.25% வரை வட்டி தரும் வங்கிகள் - முழு விவரம் இதோ!
FD கணக்கில் 7.25% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!

முன்பை விட இப்போது சிறிய நிதி வங்கிகளும், தனியார் வங்கிகளும் கூட வாடிக்கையாளர்களின் FD கணக்கில் அதிகளவு வட்டி விகிதங்களை அளிக்கிறது. அந்த வகையில் முதியவர்களுக்கான சிறப்பு வட்டி விகிதத்தை வழங்கும் பைனான்ஸ் வங்கிகள் குறித்த விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்

எதிர்கால தேவைகளுக்கான பணத்தை சேமித்து வைக்க விரும்பும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு சேவையாக திகழ்வது இவ்வகை FD கணக்குகள் தான். இந்த சலுகை பல வகையான நன்மைகளை வழங்குவதோடு சேமிப்பு கணக்கில் அதிகளவு வட்டியையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. அதனால் புதிதாக FD கணக்கு துவங்குபவர்கள் இந்த சேவையில் உள்ள சில சலுகைகளை அறிந்து கொள்வது அவசியமானதாகும். அதன் படி பொதுத்துறை வங்கிகளை போலவே சில சிறிய வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கூட சிறந்த வட்டி விகிதங்களை அளிக்கிறது.

ஆகஸ்ட் 15 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ரயிலில் பயணிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு!

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான குறைந்தளவு வட்டி விகிதங்களை வழங்கும் சில வங்கிகளும், அதில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் குறித்த விரிவான விளக்கங்களும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்களின் 3 வருட FD கணக்குகளுக்கு 7.25% வட்டியை அளிக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், அவை 3 ஆண்டுகளில் 1.24 லட்சமாக உயர்கிறது. இந்த வங்கியில் குறைந்தபட்ச முதலீடுக்கான தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக டிசிபி வங்கி மற்றும் S வங்கியின் வட்டி விகிதத்தை பொருத்தளவு, மூத்த குடிமக்களின் 3 வருட FD கணக்குகளுக்கு 7% வட்டியை அளிக்கிறது. இதில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், அவை 3 ஆண்டுகளில் 1.23 லட்சமாக உயர்கிறது. இந்த வங்கியில் குறைந்தபட்ச முதலீடுக்கான தொகை ரூ.10,000 ஆகும்.தொடர்ந்து ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தளவு, 3 வருட FD கணக்குகளுக்கு 6.85% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அவை 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.22 லட்சமாக அதிகரிக்கிறது. இறுதியாக ஆர்பிஎல் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான FD கணக்குகளுக்கு 6.80 % வட்டி கொடுக்கப்படுகிறது. இவ்வங்கியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 வருடத்தில் 1.22 லட்சம் கிடைக்கும். இது போல டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் ஆகியவை ரூ .5 லட்சம் வரையிலான FD கணக்குகளில் முதலீடு செய்ய உத்தரவாதம் அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!