மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் 1ம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வரும் மார்ச் 1ம் தேதியன்று அதாவது நாளை ஒரு நாள் மட்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுப் பட்டியலை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறைகள்

வழக்கமாக அரசு பொது விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் அரசு சார்ந்த வங்கி விடுமுறைகளான குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற தேசிய விடுமுறை நாட்களில், இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படுவது வழக்கம். ஆனால், நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடும் மஹாசிவராத்திரி உள்ளிட்ட சில பண்டிகைகள் வங்கி விடுமுறையாக அனுசரிக்கப்படுவதில்லை.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தமிழ்நாடு 2வது இடம்!

இந்த மஹாசிவராத்திரி என்பது இந்து புராணங்களின்படி, இரவில் திருமணம் செய்து கொள்ளும் சிவபெருமானுக்கும் அவரது மனைவி பார்வதி தேவிக்கும் மரியாதை செலுத்தும் ஒரு புனித பண்டிகையாகும். பொதுவாக இந்த மகாசிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட மக்களால் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் மார்ச் 1ம் தேதி அன்று சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் – பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!

அந்த வகையில் மஹாசிவராத்திரிக்கு வங்கி விடுமுறை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலாவதாக, மகாராஷ்டிரா அரசு மகாசிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 1ம் தேதியன்று வங்கி விடுமுறையை அறிவித்துள்ளது. அதே போல கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களிலும் இந்த வங்கி விடுமுறை கடைபிடிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரி இந்துக்களும் மகாசிவராத்திரியை மிகவும் விசேஷமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!