அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மே மாதம் முதல் வங்கி சேவை! முழு விவரம் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மே மாதம் முதல் வங்கி சேவை! முழு விவரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மே மாதம் முதல் வங்கி சேவை! முழு விவரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மே மாதம் முதல் வங்கி சேவை! முழு விவரம் இதோ!

கேரள அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் மே மாதம் முதல் வங்கி சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

வங்கி சேவை

சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசின் சேவைகள் எல்லாம் ஆன்லைன் செயலிகள் மூலம் எளிதாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது கேரள அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் மே மாதம் முதல் வங்கி சேவைகளை வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, கேரளாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் ஒரு பகுதி மே 20 ஆம் தேதிக்குள் கூடுதல் சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள 14,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் போதிய இடவசதி உள்ளிட்ட பிற வசதிகளுடன் கூடிய சுமார் 800 கடைகளின் உரிமையாளர்கள் கூடுதல் சேவைகளை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு ஷாக் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை அமைச்சர் ஜி ஆர் அனில் தலைமையில் இந்த வாரம் நடைபெறும் இறுதி ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (EPoS) இயந்திரங்கள் மூலம் வங்கி சேவைகளை வழங்குவது இதன் முக்கிய திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் பங்குபெற நான்கு வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் தற்போதுள்ள ரேஷன் கார்டுகள், ஏடிஎம் கார்டுகளில் உள்ளதைப் போல இந்த சேவைக்கும் சிப்-இயக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது இன்னும் ஓராண்டுக்குள் சுமார் 1,000 ரேஷன் கடைகளுக்கு இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் அனில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் 36 பழங்குடியின குக்கிராமங்களுக்கு நடமாடும் ரேஷன் கடை வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, AAY (மஞ்சள்) அட்டைதாரர்கள் பலர் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வது கண்டறியப்பட்டதை அடுத்து, நடமாடும் ரேஷன் கடைகளைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!