நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் – தனியார்மயமாக்கல் எதிரொலி!

0
நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் - தனியார்மயமாக்கல் எதிரொலி!
நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் - தனியார்மயமாக்கல் எதிரொலி!
நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் – தனியார்மயமாக்கல் எதிரொலி!

பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வங்கி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அனுசரிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

வங்கி வேலை நிறுத்தம்:

நாட்டின் வாரக்கடன் நிலுவைகளை ஈடு செய்வதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று 2021 -2022 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு நாட்டின் பல தரப்புகளில் இருந்தும் வங்கி பணியாளர்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. தனியார்மயமாக்கப்படக்கூடிய வங்கிகளின் தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் அனைத்தும் எப்போதும் போல் வழங்கப்படும் என்றும், அதில் மாற்றங்கள் செய்யப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வு? நாளை விசாரணை!

இருப்பினும், இதனை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும் முன்பு பொதுத்துறை வங்கிகளும் தனியார்மயமாக்கல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்தன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளிலும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கி வேலைநிறுத்தம் காசோலை அனுமதி, நிதி பரிமாற்றம், டெபிட் கார்டு தொடர்பான சேவைகள் போன்ற சேவைகள் இதனால் பாதிக்கப்படுகிறது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ₹7 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதே போன்று வரும் பிப்ரவரி 23 மற்றும் 24 அதவாது புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களி வங்கி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்பட இருப்பதால் வங்கிகள் மூடப்படும். வங்கி வேலைநிறுத்தத்தை கடைபிடிக்க மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பிற வங்கி சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில், என்சிஆர் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த பல ஊழியர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!