ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

0
ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் மற்றும் ஓய்வூதியத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ம் தேதி நடக்க இருந்த வேலைநிறுத்தத்தை இப்போது வங்கி தொழிற்சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதால் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை அதாவது ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சமீப காலமாக, நாடு முழுவதும் உள்ள வங்கி தொழிற்சங்கங்கள், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (NOBW) உட்பட ஒன்பது வங்கி சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன் (UFBU) வேலை நிறுத்தத்திற்கு செல்லப் போவதாக அச்சுறுத்தியது. இதற்கிடையில் ஐபிஏ உடனான ஒப்பந்தத்தின்படி, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

அந்த வகையில் சமீபத்தில் தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஐபிஏ உடனான ஒப்பந்தத்தின்படி வங்கி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாசலம் தெரிவித்தார். இதனால் ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை வங்கி தொழிற்சங்கங்கள் தற்போது ஒத்திவைத்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here