இனி ரூ.2000 நோட்டுக்கள் டெபாசிட் மிஷின் ஏற்று கொள்ளாது? அதிகாரிகள் விளக்கம்!
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு முதல் புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் குறைவாக உள்ளது. அத்துடன் ஏடிஎம் இயந்திரங்களில் ரூ. 2000 நோட்டுகள் ஏற்று கொள்ளவில்லை என்றும் புகார்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளதை பற்றி பார்ப்போம்.
பொதுமக்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனவும் அதற்கு பதிலாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் மத்தியில் சரளமாக புழங்கியது. ஆனால் தற்போது பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து கொண்டு வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி முடிவு!
இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2019ம் ஆண்டு முதல் புதிதாக ரூ.2000 நோட்டுகளை அச்சடிக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் வங்கிகளில் பெறப்படும் ரூ.2000 நோட்டுகள் வங்கிகளிலே வைத்துக் கொள்ளப்படும் என்றும் திருப்பி அனுப்பப்படாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இதற்கு சில நோட்டுகள் பழுதாகி விட்டதாக இயந்திரங்கள் காரணம் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக மூத்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, தற்போதும் ரூ.2000 நோட்டுகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் கேஷ் டெபாசிட் மெஷின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் டெபாசிட் செய்யப்படும் நோட்டுகளில் மடிப்பு அல்லது சேதம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அந்த நோட்டுகளை இயந்திரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் 2000 ரூபாய் நோட்டுக்கள் மிகவும் பழையனவாகவும் மற்றும் அதிகம் பயன்படுத்தியதாக இருப்பதாலும் மிஷின்களில் ரூ.2000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.