Bank Of India PO 2023 Admit Card வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!

0
Bank Of India PO 2023 Admit Card வெளியீடு
Bank Of India PO 2023 Admit Card வெளியீடு
Bank Of India PO 2023 Admit Card வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!

Bank Of India வங்கி PO பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடத்த இருக்கிறது. இதற்கான, அட்மிட் கார்டுகள் இன்று (மார்ச் 13) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Admit Card வெளியீடு

பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் JMGS-I ப்ரோபேஷனரி அதிகாரி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்த இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்காக, வங்கி மற்றும் நிதித்துறையில் முதுகலை டிப்ளமோ (PGDBF) படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன் அடிப்படையில், மார்ச் 19 ஆம் தேதியன்று ஆன்லைன் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதம் (Admit card), தகவல் கையேடு மற்றும் அறிவிப்புப் படிவம் ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் https://bankofindia.co.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து JMGS-I ப்ரோபேஷனரி அதிகாரி பதவிகளுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயப் பாடமாக தமிழ் மொழி – மத்திய அமைச்சர் விளக்கம்!

இந்த அட்மிட் கார்டுகள் 13.03.2023 முதல் 19.03.2023 வரை இணையதளத்தில் கிடைக்கும். மேலும், Bank of India PO ஆட்சேர்ப்பு தொடர்பான புதுப்பிப்புகளை பெற்றுக்கொள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலாவதாக, https://bankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதில், ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  • இப்போது தகவல் கையேடு (ஆங்கிலம் அல்லது ஹிந்தி) பெற கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ரோல் எண் அல்லது பதிவு எண், கடவுச்சொல்லை கொடுக்கவும்.
  • இப்போது, உங்கள் Admit card ஐ பதிவிறக்கம் செய்யவும்.

OFFICIAL NOTICE

DOWNLOAD ADMIT CARD

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!