தமிழகத்தில் ‘வங்கிக்கடன் மேளா’ – நவ.22ல் ஏற்பாடு!
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடன் வசதி
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் வழங்கும் திட்டத்தில் தொழில் துவங்க கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பலர் பயன்பெற மதுரையில் ‘வங்கிக்கடன் மேளா’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்த மேளாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி மேலாளர் பங்கேற்று தகுதி இருப்பவர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த மேளாவில் 18 வயது முதல் 45 வயத்துக்குட்பட்டோர் பங்கு பெறலாம். விருப்பமுள்ளோர் நவ 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடக்கும் மேளாவில் பங்கேற்கலாம். இதற்கு வரும் போது தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் யுனிக் ஐ.டி., கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 2 கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.