ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

0
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

வங்கி விடுமுறை

இந்தியாவில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறை வகுத்து கொடுக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும். RBI விடுமுறைப் பட்டியலை மாநில வாரியாக விடுமுறைகள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகைக்கான விடுமுறைகள் என பல்வேறு வகைகளில் பிரித்து விடுமுறை பட்டியலை தயார் செய்கிறது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு – முதல்வர் முக ஸ்டாலின் சொல்வது என்ன?

அத்துடன் இந்த விடுமுறை தினத்திற்கு மாநில அரசு பரிந்துரைகளும் இடம்பெறும். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினங்கள் வேறுபடும் என்பதால் அந்தந்த மாநிலங்களுக்குரிய பண்டிகை தினங்களுக்கேற்ப மாநில வாரியாக விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது நாளை மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினத்தை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்படும் விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படுள்ளது. மேலும் இதில் தமிழகத்தில் வார விடுமுறை மட்டுமே இந்த மாதத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்ற பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அதனால் வங்கி சேவைகளில் பாதிப்பு எதுவும் இருக்காது.

வங்கி விடுமுறை நாட்கள்:

 • 02.06.2022 – மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் – ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
 • 03.06.2022 – ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் – பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
 • 05.06.2022 – வாராந்திர விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 11.06.2022 – இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 12.06.2022 – வாராந்திர விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 14.06.2022 – துறவி குரு கபீர் ஜெயந்தி – ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
 • 15.06.2022 – ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் – ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
 • 19.06.2022 – வாராந்திர விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 22.06.2022 – கர்ச்சி பூஜை – திரிபுரா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
 • 25.06.2022 – நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 26.06.2022 – வாராந்திர விடுமுறை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
 • 30.06.2022 – ராம்னா நீ – மிசோரம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here