Bank holidays – அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! முழு விபரம் இதோ!

0
Bank holidays - அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! முழு விபரம் இதோ!
Bank holidays - அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! முழு விபரம் இதோ!
Bank holidays – அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! முழு விபரம் இதோ!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 12 விடுமுறை நாட்கள் உள்ளன. இதில் வரும் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறையாக அளிக்கப்பட உள்ளது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.

வங்கி விடுமுறை:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் வங்கி சேவைகள் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் மீண்டும் வங்கிகள் முழுவீச்சில் இயங்க தொடங்கி உள்ளன. மேலும் வழக்கமான விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 12 விடுமுறை நாட்கள் உள்ளன. வரும் வாரத்தில் பல்வேறு பண்டிகைகள் காரணமாக சனி மற்றும் ஞாயிறு உட்பட ஐந்து வங்கி விடுமுறைகள் இருக்கும்.

ஞாயிறு, இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில முதல்வர்!

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் 8 ஆம் தேதி, அசாமின் கவுகாத்தியில் முக்கியமாக கொண்டாடப்படும் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி விழாவில் வங்கிகள் மீண்டும் மூடப்படும். நாடு முழுவதும் மற்றும் முக்கியமாக கேங்டாக்கில் கொண்டாடப்படும் தீஜ் ஹரித்தாலிகாவின் காரணமாக செப்டம்பர் 9 அன்று வங்கிகள் மூடப்படும். செப்டம்பர் 10 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியினால் அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் – நிபா வைரஸ் எதிரொலி!!

இதற்கிடையில், செப்டம்பர் 11 அன்று, இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும் மற்றும் செப்டம்பர் 12 அன்று வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!