நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!

0
நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது - விடுமுறை பட்டியல் வெளியீடு!
நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது - விடுமுறை பட்டியல் வெளியீடு!
நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!

அடுத்து வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதால் அந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறை

நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வரும் நவம்பர் மாதத்தில் பாதி நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2021ம் வருடம் தற்போது முடிவுக்கு வந்திருப்பதால் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வரவிருக்கிறது. இதனால் நவம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டாட்டங்கள் மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக வங்கிகள் கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, புதிய ரேஷன் கார்டுகள் – அமைச்சர் முக்கிய தகவல்!

எனவே, நவம்பர் மாதத்தில் ஏதேனும் வங்கி கிளைகளுக்கு செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, பண்டிகை கால விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வார இறுதி விடுமுறைகள் கணக்கில் வரும்.

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை விரிவாக காணலாம்.

 • நவம்பர் 1 – கன்னட ராஜ்யோஸ்தவா காரணமாக பெங்களூரு, இம்பால் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
 • நவம்பர் 3 – நரக சதுர்சியை முன்னிட்டு பெங்களூருவில் வங்கிகள் செயல்படாது.
 • நவம்பர் 4– தீபாவளி மற்றும் லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவாஹத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா , லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • நவம்பர் 5 – தீபாவளி மற்றும் கோவர்தன் பூஜையை முன்னிட்டு அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
 • நவம்பர் 6 – பாய் துஜ், சித்ரகுப்த் ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை மற்றும் நிங்கோல் சக்கௌபா காரணமாக காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா பகுதிகள் வங்கிகளுக்கு விடுமுறை.
 • நவம்பர் 7 – ஞாயிறு பொது விடுமுறை
 • நவம்பர் 10 – சத் பூஜை, சூர்ய பஷ்டி தலா சாத்காரணமாக பாட்னா, ராஞ்சி பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
 • நவம்பர் 11 – சத் பூஜையை முன்னிட்டு பாட்னா வங்கிகள் மூடப்படும்.
 • நவம்பர் 12 – வாங்கலா திருவிழா காரணமாக ஷில்லாங் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
 • நவம்பர் 13 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
 • நவம்பர் 14 – ஞாயிறு பொது விடுமுறை
 • நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி, கார்த்திகா பூர்ணிமாவை முன்னிட்டு ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • நவம்பர் 21 – ஞாயிறு பொது விடுமுறை.
 • நவம்பர் 22 – கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் வங்கிகள் செயல்படாது.
 • நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் காரணமாக ஷில்லாங் வங்கிகள் மூடப்படும்.
 • நவம்பர் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
 • நவம்பர் 28 – ஞாயிறு பொது விடுமுறை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here