பிப்.12 (நாளை) முதல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இங்கே!

0
பிப்.12 (நாளை) முதல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இங்கே!
பிப்.12 (நாளை) முதல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இங்கே!
பிப்.12 (நாளை) முதல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இங்கே!

ரிசர்வ் வங்கியின் விடுமுறை அறிவிப்பின் படி பிப்ரவரி 12 முதல் பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகள் 11 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களின் முழு பட்டியலும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் இந்தப் பட்டியலின்படி வங்கி விடுமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பிப்ரவரி 12 முதல் பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகள் 11 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். விடுமுறைப் பட்டியலின்படி, பிப்ரவரி 2022 இல் மாநில வாரியாக ஆறு வங்கி விடுமுறைகள் உள்ளன, அவற்றில் சில ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் வார இறுதி விடுமுறை நாட்களாக உள்ளது.

IPL 2022 திருவிழா ஆரம்பம் – நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு காரணமாக பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பின்னர் பிப்ரவரி 15 அன்று, உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூரில் உள்ள ஹஸ்ரத் அலி ஜெயந்தி/லூயிஸ்-நகை-நிக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி 16 அன்று, சண்டிகர், ஹிமாச்சல், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குரு ரவிதாஸ் ஜெயந்திக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனால் நீங்கள் ஏதேனும் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னால் பிப்ரவரி மாத வங்கி விடுமுறைகள் குறித்து முதலில் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.

விடுமுறைகளின் பட்டியல்:
  • பிப்ரவரி 12: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 13: ஞாயிறு
  • பிப்ரவரி 15: ஹஸ்ரத் அலி ஜெயந்தி/லூயிஸ்-ங்காய்-நி (உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் வங்கிகள் மூடப்படும்)
  • பிப்ரவரி 16: குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர், ஹிமாச்சல், ஹரியானா மற்றும் பஞ்சாபில் வங்கிகள் மூடப்படும்)
  • பிப்ரவரி 18: டோல் யாத்ரா (மேற்கு வங்காளத்தில் வங்கிகள் மூடப்படும்)
  • பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்படும்)
  • பிப்ரவரி 20: ஞாயிறு
  • பிப்ரவரி 23: வங்கி வேலைநிறுத்தம்
  • பிப்ரவரி 24: வங்கி வேலைநிறுத்தம்
  • பிப்ரவரி 26: நான்காவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 27: ஞாயிறு

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!