வங்கிகளுக்கு இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் வெளியீடு!

0
வங்கிகளுக்கு இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் - முழு பட்டியல் வெளியீடு!
வங்கிகளுக்கு இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் - முழு பட்டியல் வெளியீடு!
வங்கிகளுக்கு இந்த மாதத்திற்கான விடுமுறை தினங்கள் – முழு பட்டியல் வெளியீடு!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்த வாரத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தின நாட்களை சேர்த்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாகவே வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. மற்ற மாதங்களை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் பண்டிகை தினங்கள் இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால், இந்த வங்கி விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை. அதாவது, எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் மட்டுமே ரக்ஷா பந்தன், தேசபக்தர் தினம், சுதந்திர தினம், பார்சி புத்தாண்டு மற்றும் வார இறுதி நாள் என 12, 13, 14, 15, 16 ஆகிய நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள வார இறுதி நாட்கள் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை (ஆக.12) மின்தடை – மின்சார வாரியம் தகவல்

மீதமுள்ள பண்டிகை தின நாட்கள் எந்தெந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த விடுமுறை நாட்கள் தனியார், பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் பொருந்தும். இந்த மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் காரணமாக கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை, தேசபக்தர் தினம் காரணமாக இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 14: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு தினம் காரணமாக பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8), கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஹைதராபாத் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 21: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக கவுகாத்தி பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா), கணேஷ் சதுர்த்தி, வரசித்தி விநாயக விரதம், விநாயகர் சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!