ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் – முழு பட்டியல் இதோ!

0
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் - முழு பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் - முழு பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் – முழு பட்டியல் இதோ!

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிடப்பட்டு உள்ளது. மாதத்தின் பாதி நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வங்கி விடுமுறை:

பல பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறைகள் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் பல நாட்களுக்கு வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும். சில நிதி பணிகளுக்காக வங்கிக்கு செல்ல நீங்கள் திட்டமிட்டால், இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய வங்கி விடுமுறைகளின் பட்டியலைப் பார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை தேசிய கொண்டாட்டங்கள், மாநிலம் சார்ந்த விடுமுறைகள் மற்றும் மத விடுமுறைகள் என மூன்று வகைகளாக வரிசைப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், பல மாநிலங்களில், வங்கிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

பல வங்கி விடுமுறைகள் பிராந்திய இயல்புடையவை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாநிலத்தை பொறுத்து, இந்த மாதம் வங்கிகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். வங்கி வாடிக்கையாளர்கள் ஏதேனும் புதிய புதுப்பிப்புகளுக்கு வங்கி விடுமுறை பட்டியலை தவறாமல் சரிபார்த்து, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட விடுமுறைப் பட்டியலையும் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் – இந்தியா முழுவதும்

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்

ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ

ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8)/ கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா

Exams Daily Mobile App Download

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்

ஆகஸ்ட் 21: மூன்றாவது ஞாயிறு

ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 28: நான்காவது ஞாயிறு

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி

ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)/கணேஷ் சதுர்த்தி/ வரசித்தி விநாயக விரதம்/ விநாயகர் சதுர்த்தி — அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!