வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றிலிருந்து ஜூன் 15 வரை விடுமுறை!

0
வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - இன்றிலிருந்து ஜூன் 15 வரை விடுமுறை!
வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - இன்றிலிருந்து ஜூன் 15 வரை விடுமுறை!
வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றிலிருந்து ஜூன் 15 வரை விடுமுறை!

வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை தினங்கள் என்பதால் இன்றிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள சில கிளை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த கிளைகளுக்கு விடுமுறை என்பது குறித்த முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இயங்கி வருகின்றன. வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது வழக்கம். மேலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கும். ஜூன் மாதத்தில் மட்டுமே வார விடுமுறை நாட்களையும் சேர்த்து 14 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இந்நிலையில், இன்றிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை வரிசையாக நான்கு நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கிளை வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து கிளை வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி சந்த் குரு கபீர் ஜெயந்தி பண்டிகை என்பதால் சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசாவில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து ஜூன் 15 ஆம் தேதி குரு ஹர்கோவிந்த்தின் பிறந்தநாள் என்பதால் ஒடிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறை தினங்களில் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த விடுமுறை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர்கள் கவனமாக எந்தெந்த கிளைகளுக்கு விடுமுறை என்பதை கவனித்து கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here