ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி நான்கு அடிப்படையில் தீர்மானிக்கிறது. அதாவது தேசிய அளவில் மற்றும் மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தவிர, தேசிய விடுமுறைகள் மற்றும் சனி-ஞாயிறு விடுமுறைகளும் காலண்டரில் குறிப்பிடப்படும். இதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

விடுமுறை பட்டியல் வெளியீடு:

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்படும். மேலும் வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றுக்கும் வேறுபடலாம்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்க இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ளதால், ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலின் படி, நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் வங்கி ஊழியர்களுக்கு மொத்தம் 12 விடுமுறைகள் ஆகும். ஆனால் உத்தரபிரதேசத்தில் 6 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களும் உள்ளடங்கும். எனவே வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்கலாம்.

  • ஜூன் 2 (வியாழன்): மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் – ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா
  • ஜூன் 3 (வெள்ளி): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் – பஞ்சாப்
  • ஜூன் 5 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
  • ஜூன் 11 (சனி): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
  • ஜூன் 12 (ஞாயிறு): வார விடுமுறை
  • ஜூன் 14 (செவ்வாய்): முதல் அரசர்/துறவி குரு கபீர் ஜெயந்தி – ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப்
  • ஜூன் 15 (புதன்): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் – ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • ஜூன் 19 (ஞாயிறு): வார விடுமுறை
  • ஜூன் 22 (புதன்): கர்ச்சி பூஜை – திரிபுரா
  • ஜூன் 25 (சனி): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
  • ஜூன் 26 (ஞாயிறு): வார விடுமுறை
  • ஜூன் 30 (புதன்): ராம்னா நீ – மிசோரம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!