டிச. 4 முதல் ஜன.20 வரை வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம்:
இந்திய வங்கித் துறையில் பணியாளர்களின் ஆட்சேர்ப்பை அதிகரிக்க வேண்டும், வழக்கமான வேலைகளுக்கு அவுட்சோர்சிங் செய்யக்கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜனவரி 20 வரை நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘வங்கிக்கடன் மேளா’ – நவ.22ல் ஏற்பாடு!
பொது மற்றும் தனியார் உட்பட அனைத்து வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஏதேனும் வங்கி சேவை தொடர்பாக திட்டமிட்டிருந்தால் நவம்பர் மாதத்திலேயே அதனை முடித்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.