HDFC வாடிக்கையாளர்களின் முக்கிய கவனத்திற்கு – வங்கியின் எச்சரிக்கை பதிவு!

0
HDFC வாடிக்கையாளர்களின் முக்கிய கவனத்திற்கு - வங்கியின் எச்சரிக்கை பதிவு!
HDFC வாடிக்கையாளர்களின் முக்கிய கவனத்திற்கு - வங்கியின் எச்சரிக்கை பதிவு!
HDFC வாடிக்கையாளர்களின் முக்கிய கவனத்திற்கு – வங்கியின் எச்சரிக்கை பதிவு!

மோசடி நபர்கள் பல்வேறு விதங்களில் புதுப்புது முறைகளை கையாண்டு மோசடி செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்களாகிய நாம் தான் நமது பணத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என HDFC வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

எச்சரிக்கை பதிவு:

வங்கிகளில் நிதி மோசடி என்பது நீண்ட காலமாகவே இருக்கும் பிரச்சினைதான். அந்த வகையில் வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பான 2021-22 ஆண்டறிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி மே 27ஆம் தேதி வெளியிட்டது. அதில் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகள் தான் அதிக மோசடிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. 2021-22 நிதியாண்டில் தனியார் துறை வங்கிகளில் மொத்தம் 5,334 நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளில் 3,078 மோசடிகள் நடைபெற்றுள்ளன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது குறிவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒரு குறிப்பிட்ட மோசடியால் HDFC வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. HDFC வாடிக்கையாளர்களுக்கு ஒரு போலியான SMS அல்லது MAIL அனுப்பப்படுகிறது. அந்த SMS அல்லது MAIL HDFC என்பதற்கு பதிலாக HDCF என்று ஒரே ஒரு எழுத்தை மாற்றி அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை எப்போது? அமைச்சர் விளக்கம்!

ஆனால் அதை சரியாக கவனிக்காமல் வாடிக்கையாளர்கள் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால், பயனாளிகள் தங்களது பான் கார்டு தகவல்களை அப்டேட் செய்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் திருட்டு போய் விடும். இதனால் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என HDFC எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் சிக்காமல் இருக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு HDFC சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அறிவுரைகள் :

  • அடையாளம் தெரியாதவர்கள் அனுப்பும் SMS, இமெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
  • அதோடு அதுபோன்ற எஸ்எம்எஸ், இமெயில்களை உடனே டெலிட் செய்து விடுங்கள். அடுத்து செய்ய வேண்டியது என்னவென்றால் இதுபோன்ற இமெயில் ஐடிகளை இனம்கண்டு உடனடியாக பிளாக் செய்துவிடுங்கள்.
  • HDFC வங்கி குறித்த எந்தவொரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்.
  • எஸ்எம்எஸ், இமெயிலில் வரும் spelling-ஐ சரிபார்க்கவும். உதாரணமாக HDFC வங்கி என்பதற்கு பதிலாக HDCF வங்கி என பெரும்பாலான மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!