BAN vs NZ T20 போட்டி: 60 ரன்னில் சுருண்டது நியூஸிலாந்து அணி!

0
BAN vs NZ T20 போட்டி 60 ரன்னில் சுருண்டது நியூஸிலாந்து அணி!
BAN vs NZ T20 போட்டி 60 ரன்னில் சுருண்டது நியூஸிலாந்து அணி!

BAN vs NZ T20 போட்டி: 60 ரன்னில் சுருண்டது நியூஸிலாந்து அணி!

பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் T20 போட்டியில் நியூஸிலாந்து அணி 60 ரன்னில் சுருண்டது. இதனால் எளிய இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி தற்போது களமிறங்கி உள்ளது.

BAN vs NZ T20 போட்டி:

நியூஸிலாந்து அணி சுற்றுபயணமாக பங்களாதேஷ் சென்று அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. உலக கோப்பை T20 போட்டி தொடருக்கான முன்னோட்டமாக இரு அணிகளும் விளையாட உள்ளதாக முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்டது. அதன் முதலாவது T20 போட்டி இன்று டாக்காவில் தொடங்கியுள்ளது.

T20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேச வீரர் தமீம் இக்பால் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி டாம் ப்ளண்டெல் 2 ரன்களுடனும், வில் யங் 5 ரன்களுடனும், ராசின் ரவீந்திரா ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ் இருவரையும் நிதானமாக ஆடினர். ஆனால் இருவரும் T20 போட்டி போல் அல்லாமல் ஒரு நாள் போட்டி போன்று விளையாடியதால் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது.

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

இவர்கள் இருவரும் வெளியேறிய பின் அணியின் வேகம் சுத்தமாக தளன்று விட்டது. அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற முடிவில் 16.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. வேகத்தில் மிரட்டிய முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முகமது சைஃபுதீன், ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தற்போது 61 ரன்கள் இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி களமிறங்கிவுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!