ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை – தாலிபான்கள் உத்தரவு!

0
ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை - தாலிபான்கள் உத்தரவு!
ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை - தாலிபான்கள் உத்தரவு!
ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை – தாலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள தாலிபான்கள் அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது சலூன்களுக்கு தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தாலிபான்கள் ஆட்சி:

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட அனுமதி இல்லை என தாலிபான்கள் கூறியதை தொடர்ந்து தற்போது தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை விதித்து சலூன்களுக்கு தாலிபான் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து இஸ்லாமிய ஒழுங்குமுறை துறையின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் – உத்தரகண்டில் பதற்றம்!

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, சலூன் கடைக்காரர்கள், முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தின் முடிவில் ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்க கூடாது. அவர்களின் தாடியை ட்ரிம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்க விடக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தாடியை வெட்டுவதற்கான தடை பற்றி கேள்விப்பட்டு மனம் உடைந்தேன். இந்த நகரம் எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். மக்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும் என லஷ்கர் காவில் வசிக்கும் பிலால் அஹ்மத் கூறியுள்ளார். தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது, பழமைவாத இஸ்லாமியர்கள் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பின் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்கு பின் தாடியை ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது நாட்டில் பிரபலமானது.

பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குறித்து முடி வெட்டுவதற்கு யாராவது வந்தால், அவர்கள் 40 முதல் 45 நாட்களுக்கு பிறகு எங்களிடம் வருவார்கள். எனவே இது மற்ற வணிகங்களை போலவே எங்கள் வணிகத்தையும் பாதிக்கிறது என லஷ்கர் காவில் உள்ள முடிதிருத்தும் கடை உரிமையாளர் ஷேர் அப்சல் கருத்து தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!